வறுத்தெடுக்கும் அஜித் ரசிகர்கள்… கலாய்ப்பை தொடரும் தமிழ்ப்படம் 2 குழு

சென்னை:
தமிழ்ப்படம் 2 படக்குழுவினரை சமூக வலைத்தளத்தில் வறுத்தெடுத்து வருகின்றனர் அஜித் ரசிகர்கள்.

அஜித்தின் பிளாக்பஸ்டர் படங்களில் மங்காத்தா படமும் ஒன்று. வெங்கட் பிரபு இயக்கியிருந்த இப்படம் பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டையாடியது.

இந்நிலையில் சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் சிவா நடித்திருந்த தமிழ்படம்-2 போன மாதம் வெளியாகியிருந்தது. மக்களிடையே பலத்த வரவேற்பை பெற்றிருந்த இப்படம் திரைக்கு வரும் முன்பே விஜய், அஜித் படங்களை எல்லாம் கலாய்த்து ப்ரோமொஷன் செய்திருந்தது.

இவர்களின் அட்டகாசம் இன்னும் முடியவில்லை. தற்போது அந்த படத்தின் 25வது நாள் நிறைவை அஜித்தின் மங்காத்தா பட போஸ்டரை வைத்து கலாய்த்துள்ளனர். இதை பார்த்த அஜித் ரசிகர்கள் கமெண்ட்டில் தங்களது கோபங்களை கொட்டி வருகின்றனர்.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!