வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லையா? அதிரடி களம் காணும் சர்கார்

சென்னை:
வாக்காளர் பட்டியலில்  பெயர் இல்லாததால் அரசியல் களம் காண்பதுதான் சர்கார் படம் என்று செய்திகள் லீக் ஆகி வருகின்றன.

சர்கார் தளபதி விஜய் நடிப்பில் பிரமாண்டமாக தீபாவளி விருந்தாக திரைக்கு வரவுள்ளது. இப்படத்தின் மீது ரசிகர்களுக்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

மிகப்பெரிய தொழிலதிபராக இருக்கும் விஜய் அமெரிக்காவிலிருந்து இந்தியா வருகிறார். அப்போது அவரது பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்காதாம். இதனால் கோபமான விஜய் இதுகுறித்து விசாரிக்கும் போது எல்லோரும் காட்டும் அலட்சியம், அவருக்கு கோபத்தை ஏற்படுத்துகிறது. இதனால் அவரே களத்தில் இறங்குவது தான் சர்கார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆனால் இதுதான் உண்மையா என்பதை இயக்குனர்தான் சொல்லணும்ங்க.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!