வாய்ப்பு கிடைத்தது…என் வழி ஜெயலலிதா வழி…ஶ்ரீரெட்டி

இயக்குநர் சித்திரைச்செல்வன் தயாரிக்கும் ரெட்டி டைரி படத்தில் தான் நடிக்க உள்ளதாக நடிகை ஸ்ரீ ரெட்டி தெரிவித்துள்ளார்.

தனக்கு சினிமாவில் வாய்ப்பு தருவதாக கூறி பலர் என்னை ஏமாற்றியதாகவும் அதற்கான ஆதாரங்கள் தன்னிடம் உள்ளதாகவும் அடுக்கடுக்காக புகார்களை நடிகை ஸ்ரீ ரெட்டி தெரிவித்திருந்தார். சினிமாவில் வாய்ப்புக்கிடைக்கவில்லை என்ற ஆதங்கத்தில் குற்றஞ்சாட்டுகிறார் என திரையுலகினர் பலர் தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ஸ்ரீ ரெட்டி, இயக்குநர் சித்திரைச்செல்வன் தயாரிக்கும் ரெட்டி டைரி படத்தில் நடிக்கவுள்ளேன். கேரளாவிற்கு தேவையான உதவிகளை செய்ய அனைவரும் முன்வர வேண்டும். ஜெயலலிதா எனக்கு ரோல் மாடல். என்னை கவர்ந்தவர் ஜெயலலிதாதான். ஆந்திராவை விட்டு வெளியேறி சென்னையில் குடியேற போகிறேன். பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றத்திற்கு நான் குரல் கொடுப்பேன். பெண்களை மையப்படுத்தி எடுக்கும் படத்தை மட்டுமே நான் தேர்ந்தெடுத்து நடிப்பேன். கவர்ச்சியில் நடிக்கமாட்டேன். தெலுங்கு சினிமாத்துறையை 4 குடும்பங்கள் மட்டுமே நிர்ணயிக்கின்றன. ஆனால் தமிழ் சினிமா அறிமுக நடிகைகளை ஆதரிக்கிறது.
இன்னும் பெரிய பெயர்கள் பட்டியலில் இருக்கின்றன. விரைவில் வெளியிடுவேன்” என கூறினார்.

Sharing is caring!