‘வாரிசுகள் அறிமுகம்’ குறித்த கேள்விக்கு பாலிவுட் நடிகை கங்கனாவின் ‘நறுக்’ பதில்!

பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரணவத்திடம், நேற்று மிட்-டே என்ற தனியார் சேனல் நேர்காணல் செய்தது. பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்த அவரிடம், ஆடியன்ஸ் ரவுண்டில் ஒரு முக்கியமான கேள்வி கேட்கப்பட்டது.

கேள்வி: வழக்கமாக திரையுலகில் இருப்பவர்கள், அவரது மகன்/மகளையும் திரையுலகில் அறிமுகப்படுத்துகின்றனர். உங்களிடம் யாராவது தொடர்பு கொண்டு, அவர்களது மகனுக்கோ, மகளுக்கோ வாய்ப்பு கேட்டால் உங்களது முடிவு என்னவாக இருக்கும்?

கங்கண ரணவத் பதில்: என்னை பொறுத்தவரை நான் அவரை அறிமுகப்படுத்தி வைத்தால் அவர் 50% தான் ஒரு இயக்குநராகவோ, நடிகராகவோ உருவாக வாய்ப்பிருக்கிறது. ஒருவர் முழு இயக்குனராக உருவாக்க வேண்டுமென்றால் அவரது வழியில் விட்டுவிட வேண்டும். அவர்களுக்கு எதில் ஆர்வம் இருக்கிறதோ, அதில் அவர் வெற்றி பெற வேண்டும்.

நான் ஒரு நல்ல அம்மாவாக இருந்தால் எனது மகனை நான் அவன் வழியில் விட்டுவிடுவேன். அதுதான் சரியானது. ஒரு மகனுக்கு தாய் காட்டும் சரியான வழியும் அதுதான் என்று நான் நினைக்கிறேன்.

கடந்த நான்கு ஆண்டுகளாக, எனது சகோதரர் ஒரு பைலட் ஆக வேண்டும் என்று கஷ்டப்படுகிறார். நான் நினைத்தால் அவருக்கு உதவலாம். ஆனால் செய்யவில்லை. ஒருவேளை அவரால் முடியவில்லை என்றாலும் அவருக்கு நிறைய வழிகள் இருக்கிறது. சொந்த ஊரில் நிலம் இருக்கிறது விவசாயம் செய்யலாம்.

ஆனால், வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் எனில் போராடித்தான் ஆக வேண்டும். அந்தப் போராட்டத்தில் இருந்து நாம் ஒரு பெரிய நிலையை அடையலாம். ஒவ்வொரு நாளும் நிகழும் நிராகரிப்பு, விரக்தி, நம்பிக்கையற்ற தன்மை ஆகியவற்றால் அவன் கற்றுக்கொள்கிறான். அது வாழ்க்கைக்கு தேவை.

அதைவிட்டு விட்டு, எனது மகனை என்ஜினீயர்/டாக்டர், நடிகர் ஆக கொண்டு வர வேண்டும் என்று நாமே நினைத்து செயல்படுவது முட்டாள்தனம்” என்று கங்கணா ரணவத் தெள்ளத் தெளிவாகவும், நிதர்சனமானவும் பேசியுள்ளார்.

Sharing is caring!