வார்த்தைகளால் மோதிக் கொண்ட பொன்னம்பலம்-ஐஸ்வர்யா

சென்னை:
பொன்னம்பலமும், ஐஸ்வர்யாவும் வார்த்தைகளால் மோதிக் கொள்ளும் ப்ரோமோ வந்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிக்பாஸ் 2 நிகழ்ச்சி ஒவ்வொரு நாளும் சூடு பிடித்து வருகிறது. இரண்டாவதாக வீட்டை விட்டு வெளியேறியுள்ளார் அனந்த் வைத்தியநாதன். பிக்பாஸ் நிகழ்ச்சியாளர்கள் ஒரு புதிய புரொமோ வெளியிட்டுள்ளனர். அதில் பொன்னம்பலம், ஐஸ்வர்யாவை ஏதோ கொஞ்சம் மோசமான விஷயம் குறித்து கேள்வி கேட்கிறார்.

அதற்கு ஐஸ்வர்யாவும் பதில் கொடுத்த பேச, இறுதியில் கையில் இருக்கும் துணியை வெளியே வீசி பொன்னம்பலத்திடம் மிகவும் கோபத்துடன் பேசுகிறார். இந்த ப்ரோமோவை பார்க்கும் போது ஷாரிக் மற்றும் ஐஸ்வர்யாவை இணைத்து பொன்னம்பலம் ஏதோ பேசியிருக்கிறார் என்பது மட்டும் தெரிகிறது.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!