வாழ்க்கையில் எதற்கும் பயப்படாதீர்கள்…. அஜித் அட்வைஸ்

சென்னை:
‘ரவி வாழ்க்கையில் எதற்கும் பயப்படாதீர்கள், பயந்தால் இங்கு யாராலும் வாழ முடியாது’ என்று அஜித் அட்வைஸ் செய்தாராம். யாருக்கு தெரியுங்களா?

வாலி அஜித் திரைப்பயணத்தில் அவராலேயே மறக்க முடியாத படம். எல்லோருக்கும் மிகவும் பிடித்த படம். இந்நிலையில் வாலி படத்தில் முதலில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியது இன்று இந்திய சினிமாவையே கலக்கும் ரவிவர்மன் தான்.

ஆனால், பெப்சி தொழிலாளர்கள் பிரச்சனையால் பயந்து தான் அந்த படத்திலிருந்து ரவிவர்மன் விலகினாராம். அந்த சமயத்தில் ரவிவர்மனை அஜித் அழைத்து ‘ரவி வாழ்க்கையில் எதற்கும் பயப்படாதீர்கள், பயந்தால் இங்கு யாராலும் வாழ முடியாது’ என அஜித் கூறிய வார்த்தையை இன்றும் மறக்க முடியாது என்று தற்போது ரவி நெகிழ்ந்து போய் கூறியுள்ளார்.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!