விக்கி கௌஷல் சிறந்த நடிகர்… பாராட்டிய நடிகர் சூர்யா

சென்னை:
பாராட்டி தள்ளியுள்ளார் நடிகர் சூர்யா… இந்திய ராணுவம் நடத்திய சர்ஜிக்கல் ஸ்டிரைக் பற்றிய படத்தை பார்த்துதான் புகழ்ந்துள்ளார்.

நடிகர் சூர்யா ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடித்து வருகிறார். என்ஜிகே ஷூட்டிங் முடிந்துவிட்ட நிலையில் காப்பான் பட ஷூட்டிங் பஞ்சாப்பில் நடந்து வருகிறது.

இந்நிலையில் சமீபத்தில் வெளியான ஒரு படத்தை பாராட்டி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் நடிகர் சூர்யா. இந்திய ராணுவம் நடத்திய சர்ஜிக்கல் ஸ்டிரைக் பற்றிய Uri: The Surgical Strike படத்தை தான் பார்த்து வியந்துள்ளதாக கூறியுள்ள சூர்யா படக்குழுவையும் பாராட்டியுள்ளார்.

விக்கி கௌஷல் சிறந்த நடிகர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!