விக்ரம் நடிக்க கமல் தயாரிக்கும் படம்… தொடங்கியது

சென்னை:
விக்ரம் நடிக்கும் ஒரு படத்தை தயாரிக்கிறார் கமல். இப்படம் நேற்று தொடங்கி உள்ளது.

கமல் நடிகர், இயக்குனர் மட்டுமல்ல தயாரிப்பாளராகவும் உள்ளார். பெரும்பாலும் இவர் நடிக்கும் படங்கள் மட்டுமே இவர் தயாரிப்பில் வரும். தற்போது இவரது மகளை கதாநாயகியாக வைத்து தயாரிக்கவுள்ளார்.

சீயான் விக்ரம் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தை தூங்காவனம் படத்தை எடுத்த இயக்குனர் ராஜேஷ் M செல்வா இயக்குகிறார்.
ஜிப்ரான் இந்த படத்துக்கு இசையமைக்கிறார். பூஜாகுமாரும் இப்படத்தில் நடிக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படம் நேற்று தொடங்கியுள்ளது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!