விக்ரம் நடித்த பிதாமகன்… இந்தி ரீமேக்கில் சல்மான்கான்?

மும்பை:
விக்ரம் நடித்த பிதாமகன் படம் இந்தியில் ரீமேக் ஆகிறது. இதில் சல்மான்கான் நடிக்கிறார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

சூர்யா விக்ரம் இருவரின் நடிப்பில் வெளியான படம் பிதாமகன். பாலா இயக்கத்தில் கடந்த 2003 ல் வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. விக்ரமுக்கு மிக முக்கிய படமாக அமைந்தது. இப்படத்தின் ஹிந்தி ரீமேக் உரிமையை நடிகரும் இயக்குனருமான சதிஷ் கௌசிக் வாங்கியிருந்தார்.

இந்நிலையில் அவர் படத்தை ரீமேக் செய்ய முயற்சித்திருந்தார். மேலும் விக்ரம் ரோலில் சல்மான் கான் நடிக்க வேண்டும் என்பது அவரின் விருப்பம். படம் வெளியாகி 16 வருடங்களாகிவிட்ட நிலையில் தற்போது ரீமேக் செய்ய போவதை உறுதி செய்துள்ளார் சதீஷ்.

அவர் கூறுகையில் இந்த ரீமேக் படத்தை நான் இயக்க போவதில்லை. நான் இப்போது என் படங்களில் பிசியாக நடித்து கொண்டிருக்கிறேன் என கூறியுள்ளார். இதில் படக்குழு பற்றிய தகவல்கள் இம்மாதத்திற்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது,

சதிஷ் விக்ரம் நடித்த சேது படத்தை தேரே நாம் என்ற பெயரில் சல்மான் கானை கொண்டு ஹிந்தியில் இயக்கியவர் என்பதும், எழுத்தாளர் ஜெயகாந்தனின் நந்தவனத்தில் ஒரு ஆண்டி என்ற கதையில் இருந்து எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

நன்றி: பத்மா மகன், திருச்சி.

Sharing is caring!