விக்ரம் படத்தின் கவுண்டிங் வீடியோ!

சாமி ஸ்கொயர் படத்தை அடுத்து நடிகர் விக்ரம், ராஜேஷ் செல்வா இயக்கத்தில் நடித்துள்ள  படம் ‘கடாரம் கொண்டான்’.

இது விக்ரமின் 56 வது திரைப்படமாகும். மேலும், கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம் இண்டர்நேஷனல் மற்றும் ட்ரிடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும்  இந்தப் படத்தில்  கமல்ஹாசனின் மகள் அக்‌ஷராஹாசன் முக்கிய வேடத்தில் நடிதுள்ளார்.

ஜிப்ரான் இசையமைத்துள்ள இந்தப் படத்துக்கு சீனிவாஸ் குப்தா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

வரும் ஜூலை 19ம் தேதி திரைக்கு வரவுள்ள இந்த படத்தின் கவுண்டிங் ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.

மாஸ் இசையுடன் உருவாக்கப்பட்டுள்ள இது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

Sharing is caring!