விக்ரம் மகன் கார் விபத்து….திலையுலகம் அதிர்ச்சி

தமிழ் சினிமாவில் கடின உழைப்பால் உயர்ந்தவர் விக்ரம். கதாப்பாத்திரத்திற்கேற்றவாறு தன்னை உரு மாற்றிக் கொண்டு நடிக்க, தற்போது இவரைப் போல் யாரும் இல்லை. அடுத்த தலைமுறைகள் சினிமாவில் அறிமுகமாகி வரும் இந்நேரத்தில், விக்ரமின் மகன் துருவ் விக்ரமும் வர்மா என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகிறார்.

இந்நிலையில் சென்னை தேனாம்பேட்டையில் துருவ் சென்ற கார் விபத்திற்குள்ளாகி இருக்கிறது. போலீஸ் கமிஷனர் வீடு அருகே நடந்த இந்த விபத்தில் விக்ரம் மகனின் கார் மோதியதில் 3 ஆட்டோக்கள் சேதமடைந்துள்ளன. ஆட்டோ டிரைவர் ஒருவருக்கு காலில் முறிவு ஏற்பட்டுள்ளது. இந்த விபத்து திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அர்ஜுன் ரெட்டி படத்தின் ரீமேக்கான வர்மாவை இயக்குநர் பாலா இயக்குகிறார். பல படங்களில் நடித்திருந்தாலும் பாலா இயக்கிய சேது படம் தான் விக்ரமை நல்ல நடிகராக நமக்கு அடையாளம் காட்டியது. இந்நிலையில் துருவ் விக்ரமின் சினிமா என்ட்ரியும் அவர் மூலமே நடப்பது குறிப்பிடத் தக்கது.

Sharing is caring!