விக்ராந்த் பட போஸ்டர்

நடிகர் விக்ராந்த் நடித்துவரும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.

விக்ராந்த் தற்போது ‘சுட்டுப்பிடிக்க உத்தரவு’ படத்தில் நடித்து வருகிறார். இவருடன் மிஷ்கின், சுசீந்திரன் உள்ளிட்ட பலரும் இந்த படத்தில் நடித்து வருகிறார். இப்படம் தற்போது இறுதி கட்டத்தை நெருங்கி உள்ள நிலையில் அடுத்து சிகை படத்தை இயக்கிய ஜெகதீசன் சுபு படத்தில் நடிக்கிறார் விக்ராந்த். விக்ராந்துக்கு மனைவியாக வசுந்தரா நடித்து வருகிறார்.

இந்த புதிய படத்திற்கு ‘பக்ரீத்’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள். பக்ரீத் திருநாள் முன்னிட்டு இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டிருக்கிறார்கள். இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஜெகதீசன் சுபு கதை, திரைக்கதை எழுதி இப்படத்தை இயக்குகிறார். இவரே இந்த படத்திற்கு ஒளிப்பதிவும் செய்யவுள்ளார். எம்10  ப்ரொடக்சன் நிறுவனம் சார்பில் எம்.எஸ் முருகராஜ் இப்படத்தினை தயாரித்து வருகிறார். இந்த படத்திற்க்கு இசையமைத்துளார்  டி.இமான். மெர்சல் படம் மூலம் பிரபலமான ரூபென் இந்த படத்தின் எடிட்டிங் வேலைகளை செய்யவுள்ளார்.

Sharing is caring!