விஜயின் 175 அடி உயர கட்அவுட்

தமிழ் சினிமாவில் புதிய படங்கள் வெளியாகும் போது பல ஆண்டுகளுக்கு முன்பு உயரமான கட்அவுட்டுகளை வைப்பது வழக்கம். நடிகர்களின் ஆளுயர உருவங்களை வரைந்து உயரமான கட்-அவுட்டாக வைப்பார்கள். டிஜிட்டல் பிரின்டிங் வந்த பிறகு அந்த வழக்கம் முற்றிலுமாக மறைந்து போனது. எம்ஜிஆர், சிவாஜி, கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகியோரது புதிய படங்கள் அந்தக் காலத்தில் வெளியான போது இப்படியெல்லாம் கட்அவுட் வைப்பார்கள்.

அப்படி மறைந்து போன கட்அவுட் கலாச்சாரத்தை கேரளாவில் உள்ள விஜய் ரசிகர்கள் ‘சர்கார்’ படத்திற்காக இப்போது கொண்டு வருகிறார்கள். கேரள மாநிலம் கொல்லத்தில் விஜய்யின் 175 அடி உயர கட்அவுட் தற்போது உருவாகி வருகிறது. இன்று மாலை அந்த கட்அவுட்டைத் திறக்க உள்ளார்கள்.

கேரளாவில் விஜய்க்கு மலையாள ஹீரோக்களை விட அதிகமான ரசிகர்கள் உள்ளார்கள். அங்கு ‘சர்கார்’ படம் மிகப் பெரும் அளவில் வெளியாக உள்ளது.

Sharing is caring!