விஜய்சேதுபதி ரோகாந்துக்கு வழங்கிய வாய்ப்பு

இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் உதவியாளர் வேங்கட கிருஷ்ண ரோகாந்த் இப்போது இயக்குனராகி இருக்கிறார். புறம்போக்கு படத்தில் விஜய் சேதுபதி நடிக்கும்போது அவருடன் ஏற்பட்ட நட்பின் காரணமாக இந்த வாய்ப்பை விஜய்சேதுபதி ரோகாந்துக்கு வழங்கி இருக்கிறார்.

இந்த படத்தை சந்திரா ஆர்ட்ஸ் சார்பில் இசக்கி துரை தயாரிக்கிறார், நிவாஸ் கே.பிரசன்னா இசை அமைக்கிறார். மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்கிறார். ஜான் பிரிட்டோ கலை இயக்கத்தை கவனிக்கிறார். மிரக்கிள் மைக்கேல் சண்டை காட்சிகளை வடிவமைக்கிறார். படம் பற்றி ரோகாந்த் கூறியதாவது:

இதில் விஜய் சேதுபதி ஒரு இசைக் கலைஞராக நடிக்கிறார். கிறிஸ்துமஸ், புத்தாண்டு, காதல் என கொண்டாட்டங்களை மையமாக கொண்ட படம். இந்த கொண்டாட்டங்களுக்கு பின்னால் இருக்கிற சர்வதேச அளவிலான பிரச்சினைகளை பேசுகிற படம். படத்தில் இரு ஹீரோயின்கள். அவர்கள் தேர்வு நடந்த வருகிறது. மற்ற நடிகர், நடிகைகள் தேர்வும் நடந்து வருகிறது. படத்திற்கு இன்னும் டைட்டில் வைக்கவில்லை. படப்பிடிப்புக்காக 150 ஆண்டு பழமை வாய்ந்த ஒரு தேவாலய செட் அமைக்கப்பட்டு வருகிறது. விஜய் சேதுபதி இதுவரை நடித்த படங்களிலேயே இது பெரிய பட்ஜெட் படமாக இருக்கும் என்றார்.

Sharing is caring!