விஜய்யின் அடுத்த படத்தில் வில்லன் அருண் விஜய்யா?

சென்னை:
விஜய்யின் அடுத்த படத்தில் வில்லனாக அருண் விஜய் நடிக்கலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

சர்கார் படத்தின் வெற்றிக்கு பிறகு விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஹீரோயினாக நயன்தாரா நடிக்கவுள்ளதாக ஏற்கனவே அறிவிப்பு வந்துவிட்டது.

இந்நிலையில் தற்போது படத்தின் வில்லன் யார் என்பது பற்றி புதிய தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் அருண் விஜய் வில்லனாக நடிக்கலாம் என செய்தி பரவியது.

ஆனால் வில்லன் கதாபாத்திரத்திற்கு ஒரு பிரபல பாலிவுட் நடிகரிடம் அட்லீ பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. உறுதியானவுடன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!