விஜய்யின் அடுத்த படத்தில் இசையமைப்பது அனிருத்

சென்னை:
இயக்குனர் மோகன்ராஜா இயக்கத்தில் விஜய் நடிக்க உள்ள படத்திற்கு இசை அனிருத் என்று கூறப்படுகிறது.

நடிகர் விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் தளபதி63 படத்தில் நடித்து வருகிறார். அதில் அவர் விளையாட்டு பயிற்சியாளராக நடிக்கிறார். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இதற்கு இசையமைக்கிறார்.

விஜய்யின் அடுத்த படம் இயக்குனர் மோகன்ராஜாவுடன் தான் என உறுதியாகியுள்ள நிலையில், இந்த படத்தின் இசையமைப்பாளர் யார் என்கிற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

கத்தி படத்தில் விஜய்க்கு இசையமைத்த அனிருத் தான் மீண்டும் விஜய்64 மூலம் மீண்டும் தளபதியுடன் கூட்டணி சேரவுள்ளார் என கூறப்படுகிறது.

இந்த படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

நன்றி: பத்மா மகன், திருச்சி.

Sharing is caring!