விஜய்யின் உடலமைப்பை மாற்ற முடிவு

ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் அட்லீ இயக்கத்தில் உருவாகவுள்ள படம் – தளபதி 63. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்தப் படத்துக்கு ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்ய, ரூபன் எடிட் செய்கிறார். கலை இயக்குநராக முத்துராஜ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இந்தப் படத்தின் முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதற்காக சென்னையில் அரங்குகள் அமைக்கும் பணியைத் தொடங்கியுள்ளார் கலை இயக்குநர் முத்துராஜ்.

அட்லீ இயக்கத்தில் விஜய், நயன்தாரா, விவேக், யோகிபாபு நடிப்பது மட்டுமே இப்போதைக்கு முடிவாகியுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இதன் படப்பிடிப்பு ஜனவரி இறுதியில் தொடங்க உள்ளது. கதைப்படி விஜய், பயிற்சியாளராக நடிக்கிறார்.

எனவே, இன்னும் பிட்டாக விஜய் இருக்க வேண்டும் என அட்லீ முடிவு செய்திருக்கிறார். இதற்காக, சிறப்பு பயிற்சியாளர், ஒருவரை வைத்து விஜய்யின் உடலமைப்பை மாற்ற முடிவு செய்துள்ளார். விஜய்யும் அவர் மூலம் தன்னுடைய உடலமைப்பை மாற்றி வருகிறார். விஜய்க்கு பயிற்சி கொடுப்பவர் பல ஆண்டுகளாக சூர்யாவுக்கு பயிற்சி தருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!