விஜய்யின் படத்தில் இவர் பாடலையா? பாடலையா?

சென்னை:
விஜய்யின் அடுத்த படத்தில் பம்பா பாக்யா பாடிய பல்லவி கூட வருமா என்பது சந்தேகம்தான் என்ற செய்தி உலா வருகிறது.

அட்லீ இயக்கத்தில் விஜய் 63 படத்தின் படப்பிடிப்புகள் மிகுந்த உற்சாகத்துடன் நடைபெற்று வருகிறது. இப்படத்தில் விஜய், நயன்தாரா, விவேக், யோகி பாபு, கதிர் என பல முக்கிய பிரபலங்கள் நடிக்கிறார்கள்.

அத்துடன் மீண்டும் இசைப்புயல் ரஹ்மான் இசையமைப்பது ரசிகர்களுக்கு மாபெரும் கொண்டாட்டம் தான். அந்த வகையில் ஆளப்போறான் தமிழன், சிம்டாங்காரன் என சூப்பர் ஹிட் பாடல்களை அவர் கொடுத்தார்.

அதிலும் சர்கார் படத்தின் வந்த சிம்டாங்காரன் பலரையும் ஈர்த்ததற்கு காரணம் புதுமையான வார்த்தைகள் கொண்ட வரிகள் தான். பாடலாசிரியர் விவேக் இதை எழுத அதை பம்பா பாக்யா முழுமையாக சிங்கிளாக பாடினார்.

தற்போது விஜய் 63 படத்தில் மீண்டும் இந்த மூவர் கூட்டணி அமையப்போவது அண்மையில் உறுதியானது. ஆனால் தற்போது இதில் அவர் ஒரு பல்லவி மட்டுமே பாடியுள்ளாராம். அதிலும் இது படத்தில் வருமா என தெரியாது என அதிர்ச்சி தகவலையும் வெளியிட்டுள்ளார்.

நன்றி: பத்மா மகன், திருச்சி.

Sharing is caring!