விஜய்யின் பேச்சில் அரசியல் சாயம் அதிகம்

ஜெயலலிதாவின் மறைவுக்குப்பிறகு ரஜினி, கமல் இருவருமே அரசியலில் பிரவேசித்தனர். இவர்களில் கமல் கட்சி தொடங்கிவிட்ட நிலையில், ரஜினி தாமதம் செய்து வருகிறார். ஆனபோது அவரது மக்கள் மன்றத்தில் உறுப்பினர் சேர்க்கும் பணிகள் துரிதமாக நடந்து வருகிறது.

இந்த நிலையில், சர்கார் ஆடியோ விழாவில் விஜய்யின் பேச்சில் அரசியல் சாயம் அதிகமாக இருந்தது. சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த கமல், விஜய்யின் அரசியல் பேச்சு குறித்து கூறியதாவது : விஜய் அரசியலுக்கு வருவதில் தவறில்லை, ஆர்வம் இருந்தால் வரலாம், வரவேற்பேன். இந்தியாவில் இப்போது உள்ள பிரச்னை ஊழல். விஜய் ஊழலுக்கு எதிராக பேசியுள்ளார், அவர் அப்படி பேசுவது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.

Sharing is caring!