விஜய்யின் 63வது படம்

சர்கார் படத்தை அடுத்து தெறி, மெர்சல் படங்களை இயக்கிய அட்லியுடன் மீண்டும் இணைகிறார் விஜய். விஜய்யின் 63வது படமாக தயாராகும் இப்படத்தில் நயன்தாரா ஹீரோயினாக நடிக்கிறார். ரஹ்மான் இசையமைக்க, ஏஜிஎஸ்., நிறுவனம் தயாரிக்கிறது.

விளையாட்டை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தில் விஜய், விளையாட்டு பயிற்சியாளராக நடிக்கிறார். தற்போது படத்தின் ப்ரீ-புரொடக்சன் பணிகள் துவங்கி உள்ளன.

இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு, பொங்கல் முடிந்து, ஜனவரி 20-ந் தேதி பூஜை போடப்பட்டு, அதற்கடுத்த நாள்(ஜன.,21) முதல் சென்னையில் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Sharing is caring!