விஜய் – அட்லீ கூட்டணியின் அடுத்த படம் ஜனவரியில் ஸ்டார்ட்

சென்னை:
ஜனவரி மாதம் தொடங்குகிறது விஜய்யின் அடுத்த படம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

விஜய்யின் சர்கார் படத்தின் அப்டேட்டுகள் செம மாஸாக இருக்கிறது. வியாபாரம் படு விறுவிறுப்பாக நடந்துள்ளது, விநியோகஸ்தர்கள் போட்டி போட்டு எல்லா இடத்திலும் படத்தை வாங்கி வருகிறார்களாம்.

U/A என்ற தணிக்கை சான்றிதழ் பெற்றுவிட்டது, நவம்பர் 6ம் தேதி தீபாவளி ரிலீஸ் என்று அறிவிக்கப்பட்டுவிட்டது. சரி சர்கார் வரட்டும் கொண்டாடுவோம் என காத்துக் கொண்டிருக்கும் விஜய் ரசிகர்களுக்கு ஒரு இனிப்பு செய்தி.

அது விஜய்யின் 63வது படத்தின் புதிய அப்டேட்தான் வந்துள்ளது. அட்லீயுடன் மூன்றாவது முறையாக விஜய் கூட்டணி அமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதம் தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!