விஜய் – அட்லீ கூட்டணியில் இணைகிறாரா ரஹ்மான்?

சென்னை:
விஜய்- அட்லீ கூட்டணியில் ஏ.ஆர்.ரஹ்மான் இணைந்துள்ளார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

அட்லீ-விஜய் மூன்றாவது முறையாக இணைகிறார்கள் என்றே தகவல் ரசிகர்களுக்கு குஷி தான். ஏஜிஎஸ். நிறுவனம் தயாரிக்க இருக்கும் இப்படம் குறித்து வேறு எந்த தகவலும் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை.

ஆனால் அவ்வப்போது சில விஷயங்கள் படம் குறித்து வெளியாகிய வண்ணம் உள்ளது. படத்தின் இசையமைப்பாளர் குறித்து சமூக வலைதளத்தில் ஒரு பிரபலத்தின் பெயர் அடிபடுகிறது. அது வேறுயாரும் இல்லைங்க… மெர்சல் படத்திற்கு இசையமைத்த இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

மெர்சலில் தளபதியை ரசிக்க வைத்த ரகுமான் சர்காரிலும் கலக்க இருக்கிறார். அடுத்த படத்திலும் இவரே இசையமைப்பாளர் என்பதால் விஜய் ரசிகர்கள் உற்சாகம் ஆகி உள்ளனர்.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!