விஜய் – அட்லீ கூட்டணி படமும் அடுத்தாண்டு தீபாவளி ரிலீஸ்தான்

சென்னை:
விஜய்யின் சர்கார் படம் இந்த தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறது. அடுத்ததாக அவர் அட்லீயுடன் இணையும் படம் அடுத்த தீபாவளிக்கு ரிலீஸ் என்பது சொல்லாமல் சொல்லப்பட்டுள்ளது.

நடிகர் விஜய்,  ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய சர்கார் படத்தில் நடித்து முடித்துள்ளார். தீபாவளிக்கு ரிலீஸாகவுள்ள இந்த படத்திற்காக தான் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

இந்த படம் முடிந்துவிட்டதால் இதற்கு அடுத்ததாக விஜய், அட்லீ இயக்கத்தில் நடிக்க உள்ளார். இதிலும் நாயகியாக கீர்த்தி சுரேஷ் தான் நடிக்கவுள்ளார் என்று கூறப்படுகிறது. படப்பிடிப்பு வருகிற ஜனவரியில் துவங்க உள்ளதாம்.

லொக்கேஷன் பார்க்கும் வேலைகளில் தான் அட்லீ தீவிரமாக இறங்கியுள்ளார். இந்நிலையில் இந்த படத்தை தயாரிக்க இருக்கும் அர்ச்சனா கல்பாத்தி ஒரு டுவிட்டர் பதிவில் அடுத்த வருட தீபாவளியை பற்றியும் பதிவிட்டுள்ளார்.

எனவே விஜய்- அட்லீ இணையும் அடுத்த படம் 2019 தீபாவளிக்கு ரிலீஸ் என்பது சொல்லாமல் சொல்லப்பட்டுள்ளது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!