விஜய் – அட்லீ படத்தின் பட்ஜெட் ரூ. 125 கோடியாம்!

சென்னை:
ரூ. 125 கோடியாம்… விஜய்யின் அடுத்த படத்தின் பட்ஜெட் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

அட்லீ இயக்கத்தில் விஜய் மூன்றாவது முறையாக நடிக்கிறார். விளையாட்டு தொடர்பான கதை என கூறப்படும் இந்த படத்தின் பூஜை சமீபத்தில் நடந்தது.

ஏஜிஎஸ் நிறுவனம் இந்த படத்தை ரூ.125 கோடி செலவில் தயாரிக்கிறது என்று கூறப்படுகிறது. அந்த நிறுவனத்தின் அர்ச்சனா கல்பாத்தி தீவிர விஜய் ரசிகை என்பது குறிப்பிடத்தக்கது. ஷூட்டிங் தற்போது சென்னை பின்னி மில்லில் நடந்துவருகிறது.

முதல் நாளே சண்டை காட்சிகள் தான் படமாக்கப்பட்டதாம். மேலும் இரண்டாவது ஷெட்யூலில் தான் ஹீரோயின் நயன்தாரா நடிக்க வருவார் என்றும் கூறப்படுகிறது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!