விஜய் ஒரு பிறவி நடனக் கலைஞர்… புகழ்ந்து தள்ளிய நடிகர் அஜித்

சென்னை:
விஜய் ஒரு பிறவி நடனக் கலைஞர். சர்வ சாதாரணமாக ஆடுகிறார் என்று புகழ்ந்துள்ளார் நடிகர் அஜித்.

விஜய், அஜித் இருவரும் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாக உள்ளனர். இவர்களது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் யார் திரைத் துறையில் பெரியவர் என்று ஒருபுறம் சண்டையிட்டுக் கொண்டிருக்க, அவர்கள் இருவரும் நட்புடன்தான் இருக்கிறார்கள்.

இதுகுறித்து நடிகரும், ஆர்.ஜே.வுமான நடிகர் ரமேஷ் திலக் ஒரு நிகழ்ச்சியில் பேசுகையில் கூறியதாவது:

“நான் அஜித் சாருடன் நடித்துவிட்டேன். விஜய் சாருடன் ஒரு படமாவது நடித்துவிட வேண்டும். அவர்கள் இருவரும் நண்பர்களாகவே உள்ளனர். ‘விஸ்வாசம்‘ படப்பிடிப்பின் போது கேரவனில் நானும் அஜித் சாரும் அமர்ந்திருந்தோம். அப்போது தொலைக்காட்சியில் விஜய் சாரின் பாட்டு ஓடியது. அதைப் பார்த்த அஜித் சார், விஜய் ஒரு பிறவி நடனக் கலைஞர். சர்வ சாதாரணமாக ஆடுகிறார் என்று புகழ்ந்தார். இருவரும் ஒருவரையொருவர் அவ்வளவு பாராட்டிக் கொள்கிறார்கள்’’

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

நன்றி: பத்மா மகன், திருச்சி.

Sharing is caring!