விஜய் சேதுபதியின் அடுத்த படம் மார்ச் 4 ல் ஆரம்பம்

விஜய் சேதுபதி நடிக்க இருக்கும் அடுத்த படத்திற்கான படபிடிப்பு  மார்ச் 4ல்  தொடங்கவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

இயக்குனர் விஜய் சந்தர் இயக்கத்தில், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, நடிக்க உள்ளார். இப்படத்தின் நாயகிகளாக ராசி கன்னா மற்றும் நிவேதா பெத்துராஜ் ஆகியோர் ஒப்பந்தம் ஆகியுள்ளனர்.மேலும் இப்படத்தில் நாசர், சூரி, ராஜேந்திரன், மாரிமுத்து உள்ளிட்டோரும் நடிக்க உள்ளனர்.

விஜயா புரொடக்சன்ஸ் தயாரிப்பில் உருவாக உள்ளது இப்படம். இந்நிலையில் இப்படத்திற்கான படபிடிப்பு  மார்ச் 4ம் தேதி ஹைதராபாத்தில் துவங்குகிறது.

Sharing is caring!