விஜய் சேதுபதியின் சீதக்காதி படத்திற்கு திடீர் சிக்கல்

சென்னை:
புது பிரச்னை ஒன்று முளைத்துள்ளது விஜய்சேதுபதி படத்திற்கு.

விஜய் சேதுபதி நடிப்பில் சீதிக்காதி படம் வெளியாகவுள்ளது. அவர் இதில் அய்யா ஆதிமூலம் கேரக்டரில் நாடக நடிகராக நடித்துள்ளார். பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் வந்துள்ள இப்படத்திற்கு தற்போது சிக்கல் எழுந்துள்ளது.

இப்படத்திற்கு தடை கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார் கீழக்கரையை சேர்ந்த முகமது சாலையா உசேன். கீழக்கரையில் வாழ்ந்து மறைந்த வள்ளல் சீதக்காதியின் வழி வந்தவர் முகமது.

அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் இந்த படமானது எங்கள் முன்னோரின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் விதத்தில் இருக்கலாம் என்பதால் படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என கூறியுள்ளார்.

இந்த மனுவை இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று தெரிகிறது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!