விஜய் சேதுபதியின் “செக்க சிவந்த வானம்”

மணிரத்தினம் இயக்கிவரும் செக்க சிவந்த வானம் படத்தில் சிம்பு,விஜய்சேதுபதி, அரவிந்த்சாமி,அருண் விஜய், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ்,அதிதி ராவ் என பல நட்சத்திரங்கள் நடித்து வருகிறார்கள். இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர் ரகுமான் இசையமைத்துவருகிறார்.

மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கும்  17 வது திரைப்படம் இது. இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார் சந்தோஷ் சிவன். ஆக்ஷன் திரில்லர் என அட்டகாசமாக உருவாகியிருக்கும் இந்த படத்தை வருகிற செப்டம்பர் 28ம் தேதி ரிலீஸ் செய்ய படக்குழு  திட்டமிட்டுள்ளது.

அரவிந்த் சாமி அவர்களுக்கு வரதன் என பெயர் வைத்துள்ள ஃபர்ஸ்ட் லுக் வெளியான நிலையில் நேற்று அருண் விஜய்யின் தியாகு என பெயர் வைத்துள்ள ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. இதை தொடர்ந்து தற்போது விஜய் சேதுபதியின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.

இந்த போஸ்டர் மூலம் இவரது கதாபாத்திரத்தின் பெயர் ரசூல் என்பது தெரியவந்துள்ளது. படத்தின் மூன்று நடிகர்களின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான நிலையில் கடைசியாக வெளியாக இருக்கும் சிம்புவின் போஸ்டரை காண ரசிகர்கள் ஆர்வமோடு உள்ளனர்.

Sharing is caring!