விஜய் சேதுபதியின் படத்திற்கு தலைப்பு இதுதான்

தற்போது, விஜய் சந்தர் இயக்கி வரும்  திரைப்படத்தில் விஜய் சேதுபதி  நடித்து வருகிறார்.  வடசென்னையை மையமாக வைத்து படத்தின் கதை அமைந்துள்ளது. மேலும், இந்தப் படத்தில்  விஜய் சேதுபதிக்கு  ஜோடியாக ராஷி கண்ணா,  நிவேதா பெத்துராஜ் ஆகிய இரு நாயகிகள் நடித்து வருகின்றனர்.

ஹைதராபாத் பகுதியில் ஷூட்டிங் நடைபெற்று முடிவடைந்திருக்கும் நிலையில், தற்போது சென்னையில் ஷூட்டிங் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.  இந்நிலையில் விஜய் சேதுபதியின் படத்திற்கு  தலைப்பை  ‘சங்கத் தமிழன்’ என பெயர் வைக்க உள்ளதாக இயக்குனர் விஜய் சந்தர் இன்று  தெரிவித்துள்ளார்.

Sharing is caring!