விஜய் சேதுபதியுடன் இணைந்து நடிக்க ஆசை

‘இமைக்கா நொடிகள்’ படம் மூலம் தமிழில் அறிமுகம் ஆனவர் தெலுங்கு நடிகையான ராஷி கண்ணா. இவர், நடிகர் ஜெயம் ரவியுடன் ‘அடங்க மறு’ படத்திலும் நடித்திருக்கிறார். அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

என் உடல் மீது எனக்கு அலாதியான ப்ரியம் உண்டு. உடம்பை அழகாகவும்; ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள விரும்புவேன். அதனால், தினமும் ரிலாக்ஸாக ஒன்றரை மணி நேரம் உடல் பயிற்சி செய்வேன். சாப்பாட்டில் காரம் எனக்கு பிடிக்காது. மசாலா பொருள் கலந்திருந்தாலும் பிடிக்காது. நிறைய சாப்பிடவும் பிடிக்காது.

கறுப்பு – வெள்ளையை பலரும் வெறுப்பர்; ஆனால், எனக்கு பிடிக்கும். கவிதை எழுதப் பிடிக்கும். நிறைய எழுதுவேன்; ஆனால், யாரிடமும் காண்பிக்க மாட்டேன். பைக், கார் ரொம்ப பிடிக்கும். குறிப்பாக, அதில் நீண்ட தூரத்துக்கு பயணம் செல்வது பிடிக்கும். ‘இமைக்கா நொடிகள்’ படத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி இருவர் கூடவும் நடிக்க வாய்ப்பு கிடைக்காதது வருத்தம் தான். ‘விக்ரம் வேதா’ படம் பார்த்ததில் இருந்து, விஜய் சேதுபதியுடன் இணைந்து நடிக்க ஆசை. அதேபோல, ‘தெறி’, ‘மெர்சல்’ இரண்டு படங்களையும் பார்த்தேன். விஜய்-அட்லீ கூட்டணி மிரட்டியிருக்கின்றனர். இருவர் காம்பினேஷனிலும் எனக்கு வாய்ப்பு வர வேண்டும் என்ற ஆசை மேலிட்டிருக்கிறது.

இவ்வாறு ராஷி கண்ணா கூறியுள்ளார்.

Sharing is caring!