விஜய் நடிக்கும் அடுத்த படம் இயக்கம் அட்லீ, தயாரிப்பு ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம்

விஜய் நடித்து தீபாவளிக்கு வெளிவந்த ‘சர்கார்’ படம் உலகம் முழுவதும் நல்ல வசூலைக் கொடுத்து வருவதாகச் சொல்லி வருகிறார்கள். விஜய் நடிக்கும் அடுத்த படத்தை இயக்கப் போவது அட்லீ என ஏற்கெனவே தகவல் வெளியாகிவிட்டது. அந்தப் படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இன்று காலை இப்படத்திற்கான எளிய பூஜை ஒன்று நடைபெற்றுள்ளது. அதைத் தொடர்ந்து இன்று மாலை 4 மணிக்கு படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட உள்ளார்கள்.

இந்தப் படத்திற்குத் ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பாரா என்பது சந்தேகம் தான். தொடர்ந்து ‘மெர்சல், சர்கார்’ ஆகிய இரண்டு விஜய் படங்களுக்கும் ரகுமான் தான் இசையமைத்துள்ளார். அதனால் மாற்றத்திற்காக அனிருத் அல்லது வேறு யாராவது இசையமைப்பார்களா அல்லது ரகுமானே இசையமைக்க சம்மதிப்பாரா என்பது இன்று தெரிந்துவிடும்.

மேலும் இந்தப் படத்தில் நயன்தாரா, சமந்தா ஆகிய இருவரையும் நாயகிகளாக நடிக்க வைக்கப் பேசி வருகிறார்களாம். நயன்தாரா இதற்கு முன்பு விஜய்யுடன் ‘வில்லு’ படத்திலும் சமந்தா, ‘கத்தி’, ‘தெறி’ படத்திலும் நடித்திருக்கிறார். இருவரும் படத்தில் இருந்தால் தெலுங்கு வியாபாரத்திற்கும் உதவும் என தயாரிப்பு நிறுவனம் நினைக்கிறதாம்.

விஜய்யின் 63வது படமாக இந்தப் படம் உருவாக உள்ளது.

Sharing is caring!