விஜய் நடிக்கும் 63வது படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதம்

தெறி, மெர்சல் படங்களைத தொடர்ந்து அட்லீ இயக்கத்தில் விஜய் நடிக்கும் 63வது படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதம் முதல் தொடங்குகிறது. இந்த படத்தில் சிவகாசி, வில்லு படங்களுக்குப்பிறகு மீண்டும் விஜய்யுடன் இணைகிறார் நயன்தாரா. ஏ.ஆர்.ரஹ்மான் இசை, ஏஜிஎஸ்., நிறுவனம் தயாரிக்கிறது.

2019 தீபாவளிக்கு இந்தப்படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று இந்த படத்திற்கான செட் அமைக்கும் பணிக்கான பூஜை நடந்தது. தொடர்ந்து செட் அமைக்கும் வேலைகள் துவங்கி உள்ளன.

Sharing is caring!