விஜய் படத்தில் நடிக்கிறார் நடிகர் சௌந்தரராஜா

சென்னை:
விஜய் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் நடிகர் சௌந்தரராஜா என்று தெரிய வந்துள்ளது.

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘தளபதி 63’ படத்தில் பிரபல நடிகர் இணைந்திருக்கிறார்.

அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘தளபதி 63’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சமீபத்தில் பின்னி மில்லில் பிரம்மாண்ட அரங்குகள் அமைத்து அதிரடி சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டது.

இதில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். விவேக், கதிர், யோகிபாபு, ஆனந்த்ராஜ், சூப்பர் சிங்கர் ஜூனியரில் மிகவும் பிரபலமான கபீஸ் பூவையார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.

சமீபத்தில் அரசியல்வாதி நாஞ்சில் சம்பத் இணைந்திருப்பதாக செய்திகள் வெளியானது. தற்போது இவர்களோடு நடிகர் சௌந்தரராஜாவும் இணைந்திருக்கிறார். பல வெற்றி படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் சௌந்தரராஜா, இந்த படத்திலும் முக்கிய கதாபாத்திரம் ஏற்று இருக்கிறார். சிறிய வேடம் என்றாலும் வலுவான வேடமாக இருக்கும் என்று சௌந்தரராஜா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

நன்றி: பத்மா மகன், திருச்சி.

Sharing is caring!