விஜய் புதிய படத்தில் இணைந்த மலையாள நடிகை

சென்னை:
விஜய்யின் புதிய படத்தில் மலையாள நடிகை முக்கிய வேடத்தில் நடிக்கிறார் என்று தெரிய வந்துள்ளது.

விஜய் இதுவரை 62 படங்கள் நடித்து விட்டார். இதில் எல்லாமே வித்தியாசமான வேடங்கள் தான், ஆனால் 63வது படத்தில் ஒரு விளையாட்டின் பயிற்சியாளராக நடிக்கிறார்.

இப்படத்திற்கான படப்பிடிப்பு சென்னையை சுற்றி பரபரப்பாக நடந்து வருகிறது. இதில் நயன்தாரா நாயகியாக நடிக்கிறார். இந்நிலையில் படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் மலையாள நடிகை ரேபா மோனிகா ஜான் நடிக்க இருப்பதாக செய்தி வந்துள்ளது.

இவர் இதற்கு முன் ஜெய் நடித்த ஜருகண்டி படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

நன்றி: பத்மா மகன், திருச்சி.

Sharing is caring!