விஜய் ரசிகர்களுக்கு சர்பார் பட ட்ரீட்

மெர்சல் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து விஜய் தற்போது சர்கார் படத்தில் நடித்து வருகிறார். இதனை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க, வரலக்‌ஷ்மி ஒரு முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். இவர்களுடன் ராதா ரவி, பழ.கருப்பையா, யோகி பாபு, பிரேம் குமார் ஆகியோரும் நடிக்கிறார்கள். தீபாவளிக்கு வெளியாகும் இந்தப் படத்தின் பாடல்கள் அக்டோபர் 2-ம் தேதி வெளியாகும் என அறிவித்திருக்கிறார்கள்.

இந்நிலையில் ரசிகர்களை மகிழ்விக்க, சர்காரின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் தற்போது ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. ‘சர்காரின் திரைக்குப் பின்னால் எடுக்கப்பட்ட படங்கள் வெளியாகிறது. நாளை முதல் தொடர்ந்து 5 நாட்களுக்கு சர்கார் படத்தின் ஒர்க்கிங் ஸ்டில்ஸ், தினம் ஒன்று வீதம் வெளியிட இருக்கிறோம்’ என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தினர்.

Sharing is caring!