‘விஜய்-63’ ஆரம்பமே சண்டை

தெறி’, ‘மெர்சல்’ படங்களைத் தொடர்ந்து அட்லியும், விஜய்யும் மூன்றாவது முறையாக இணைந்துள்ளனர். ‘விஜய்-63’ என தற்காலிகமாக பெயர் சூட்டப்பட்டுள்ள இந்தப் படத்தின் பூஜை சில தினங்களுக்கு முன் விமரிசையாக நடைபெற்றது.

விஜய்யுடன் நயன்தாரா, சிகை கதிர், விவேக், யோகிபாபு ஆகியோர் நடிக்கும் இந்த படத்தில் வில்லனாக டேனியல் பாலாஜி நடிக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கும் இப்படத்தில் விவேக் பாடல்களை எழுதுகிறார்.

திருட்டுப்பயலே படத்தின் மூலம் படத்தயாரிப்புக்கு வந்த ‘ஏ.ஜி.எஸ்.எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனத்தின் 20-ஆவது தயாரிப்பாக உருவாகும் ‘விஜய்-63’ படத்தை சுமார் 125 கோடி பட்ஜெட்டில் மிகப் பிரம்மாண்டமான முறையில் உருவாகிறது.

இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையிலுள்ள பின்னி மில்லில் துவங்கியுள்ளது. முதல்நாள் படப்பிடிப்பில் சண்டை காட்சிகளை படமாக்கப்பட்டன. முதல்ஷெட்யூலில் சண்டைக்காட்சிகளை படமாக்க திட்டமிட்டுள்ளார்கள். இரண்டாவது ஷெட்யூலில்தான் நயன்தாரா இணைகிறார்.

விஜய்யின் ‘மெர்சல்’, ‘சர்கார்’ ஆகிய படங்கள் வெளியாகியதை போல தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்த படம் வெளியாக இருக்கிறது.

Sharing is caring!