விஞ்ஞானியாக நடிக்கும் படத்திற்கு லொக்கேஷன் தேடும் மாதவன்

மும்பை:
விஞ்ஞானியாக நடிக்கும் படத்திற்காக படப்பிடிப்பு இடங்களை தேடி வருகிறார் நடிகர் மாதவன்.

ராக்கெட்டரி’ படத்திற்கான படப்பிடிப்பு இடங்களை தேர்வு செய்வதற்காக அமெரிக்காவின் ஜியார்ஜியா மாகாணத்தில் முகாமிட்டுள்ளார் நடிகர் மாதவன். இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கையை மையப்படுத்தி படம் தயாராகவுள்ளது. இந்த படத்தில் நம்பி நாராயணன் கதாபாத்திரத்தில் நடிப்பது மட்டுமன்றி, ஆனந்த் மகாதேவனோடு இணைந்து இயக்கவும் மாதவன் திட்டமிட்டார்.

2018ம் ஆண்டு அக்டோபர் 31-ம் தேதி இப்படத்திற்கான முதல் பார்வை போஸ்டர் வெளியிடப்பட்டது. தமிழ், இந்தி, ஆங்கிலத்தில் நேரடியாகவும் மலையாளம் மற்றும் தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்பட்டும் இப்படம் உருவாகும் என படக்குழு தெரிவித்தது.

இந்நிலையில் ஒருசில காரணங்களால் இயக்குநர் பொறுப்பிலிருந்து ஆனந்த் மகாதேவன் தற்போது விலகியுள்ளார். தொடர்ந்து படத்தின் முழு இயக்குநர் பொறுப்பையும் மாதவனே ஏற்றுக் கொண்டுள்ளார். இதை தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் உறுதிப்படுத்தினார்.

இந்நிலையில், நடிகர் மாதவன் ‘ராக்கெட்டரி’ படத்திற்கு லொக்கேஷனை தேர்வு செய்ய ஜியார்ஜியா சென்றுள்ளார். அங்கிருந்து வீடியோ பதிவிட்ட அவர், தற்போது ஜியார்ஜியாவில் மைனஸ் 6 டிகிரி தட்பவெட்ப நிலை இருப்பதாகவும், ‘ராக்கெட்டரி’ படத்திற்கான அடுத்தக்கட்ட படப்பிடிப்பு இங்கு தான் நடைபெறவுள்ளதாகவும் கூறியுள்ளார்.

நன்றி: பத்மா மகன், திருச்சி.

Sharing is caring!