விடிய, விடிய தொடர்ந்த பார்ட்டி… போலீசார் வந்து நிறுத்தினர்

மும்பை:
நடிகர் ஷாரூக்கான் நடத்திய பிறந்த நாள் பார்ட்டி நள்ளிரவை தாண்டி 3 மணி வரை அதிக சத்தத்தோடு நடந்ததால் போலீஸ் வந்து நிறுத்தி உள்ளனர்.

சினிமாவில் உச்ச நட்சத்திரம் என்றாலே பிறந்தநாள் கொண்டாட்டங்கள் எப்படி பிரம்மாண்டமாக இருக்கும். பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் பிறந்தநாளும் இருந்தது.

அவர் நடித்துள்ள Zero படத்தின் ட்ரைலர் வெளியாகி மிக பிரம்மாண்ட ரெஸ்பான்ஸ் பெற்றுள்ளது. 24 மணி நேரத்தில் 54 மில்லியன் பார்வைகளை பெற்று சாதனை செய்துள்ளது.

இந்நிலையில் ஷாருக் பிறந்தநாள் அன்று டிரெய்லர் வெளியீட்டு விழாவுக்கு பிறகு ஒரு பிரபல ஓட்டலில் தன் நண்பர்களுக்காக ஒரு பெரிய பார்ட்டிக்கு ஏற்பாடு செய்துள்ளார். பல முன்னணி நடிகர், நடிகைகள் வந்திருந்தனர்.

பார்ட்டி நள்ளிரவை தாண்டி 3 மணி வரை அதிக சத்தத்தோடு நடந்துள்ளது. இதை கவனித்த போலீசார் ஓட்டலுக்கு வந்து உடனே பார்ட்டியை நிறுத்தி உள்ளனர். இதனால் ஷாருக்கின் பிறந்தநாள் பார்ட்டி பாதியிலேயே முடிந்துள்ளது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!