“விண்ணைதாண்டி வருவாயா 2” ல் அனுஸ்கா சிம்பு ஜோடி

சிம்புவின் ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ இரண்டாம் பாகத்தில் நாயகியாக அனுஷ்கா ஷெட்டியை ஒப்பந்தம் செய்ய இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு, த்ரிஷா நடித்த ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வெற்றியை அடைந்தது. தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க கவுதம் மேனன் திட்டமிட்டுள்ளார். படத்தில் சிம்பு நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நடிக்க ஹீரோயின் தேர்வு நடைபெற்று வருவதாக கூறப்பட்டது. சிம்பு-த்ரிஷாவின் கெமிஸ்ட்ரி எப்படி ஹிட் அடித்ததோ, அதே போன்ற கெமிஸ்ட்ரியை கொடுக்க படக்குழு முயற்சித்து வருகிறது. எனினும், படம் குறித்த எந்த ஒரு தகவலும் அதிகாரபூர்வமாக வெளியிடப்படாமல் இருக்கிறது.

தற்போது விடிவி-2 படத்தில் நாயகி அனுஷ்கா சர்மாவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக, படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் சொல்கிறது. அண்மையில் ஒரு நிகழ்ச்சியில், சிம்பு தனது ரிஸன்ட் ஃபேவரைட் ஹீரோயின் அனுஷ்கா ஷெட்டி என்று குறிப்பிட்டார்.

விடிவி முதல் பாகத்தில் ஜெஸ்ஸி, கார்த்திகை விட்டுச் சென்றுவிடுவார். இதனால் படத்தின் இரண்டாம் பாகத்திற்கு டைட்டில், ‘ஒன்றாக’ என்று முதலில் வைக்கப்பட்டது. ஆனால், கவுதம் ‘விண்ணைத்தாண்டி வருவேன்’ என்று பின்னர் மாற்றி அமைத்தார்.

Sharing is caring!