வித்தியாசமான கதைகள் இருக்கு… இயக்குனர் பாராட்டு

சென்னை:
மிகவும் சுவாரஸ்யமான சந்திப்பு. வித்தியாசமான கதைகள் அவரிடம் உள்ளது என்று பாராட்டி தள்ளியுள்ளார் இயக்குனர் கார்த்தி நரேன்.

சிம்பு-கார்த்திக் நரேன் இருவரும் கூட்டணி அமைக்க உள்ளனர். இந்த படத்தை பற்றிய அறிவிப்பு எப்போது வரும் என்று ரசிகர்கள் ஆவலாக இருக்கின்றனர். இந்நிலையில் சிம்புவுடன் கதை குறித்து பேசி உள்ளார் கார்த்திக் நரேன்.

இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது: சிம்புவை 30 நிமிடங்கள் சந்தித்தேன், மிகவும் சுவாரஸ்யமான சந்திப்பு. அவர் விரைவில் இயக்க இருக்கும் சில கதைகளை கூறினார், அது எல்லாம் மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது.

ஏன் இன்னும் நீங்கள் இயக்க ஆரம்பிக்கவில்லை என்று கேட்டதற்கு, சரியான நேரத்திற்காக காத்துக் கொண்டிருக்கிறேன் என்றார்.

அவர் எழுதிய சில கதைகள் புதிதாக இருந்தது, விரைவில் எங்களுடைய கூட்டணி படம் தொடங்கும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!