வித்யாபாலன் என்டிஆரின் மனைவி பசவதாரகம் வேடத்தில் நடித்துள்ளார்

தெலுங்கில் என்டிஆர் வாழ்க்கை வரலாறு படத்தில் பாலகிருஷ்ணா நாயகனாக நடிக்க, வித்யாபாலன் என்டிஆரின் மனைவி பசவதாரகம் வேடத்தில் நடித்துள்ளார். இந்த வேடத்தில் நடிக்க முதலில் தயங்கிய வித்யாபாலனிடம், படத்தின் மொத்த ஸ்கிரிப்ட் பேப்பரையும் கொடுத்து படிக்க வைத்த பின்னரே அதில் நடிக்க சம்மதம் சொன்னார்.

மேலும், படப்பிடிப்பு தளத்துக்கு வந்த முதல்நாளே பசவதாரகம் கேரக்டர் தன்னை மிகவும் பாதித்து விட்டதாக சொல்லி நடிக்கத் தொடங்கினார் வித்யாபாலன். தற்போது அப்படம் ரிலீசுக்கு தயாராகி விட்ட நிலையில், பசவதாரகம் கேரக்டரில் நடித்தது பற்றி அவர் விடுத்துள்ள செய்தியில், இந்த கேரக்டர் ஒரு மறக்க முடியாத பந்தம். பசவதாரகம் என்டிஆரின் வாழ்க்கையில் எத்தகையை முக்கியத்துவம் வாய்ந்தவராக இருந்திருக்கிறார் என்பதை இந்த படத்தின் மூலம் மக்களுடன் பகிர்ந்து கொள்வது மகிழ்ச்சியாக உள்ளது.

இப்படத்தில் பாலகிருஷ்ணாவுடனான எனது கெமிஸ்ட்ரி மிக இயல்பாக வெளிப்பட்டிருக்கும். இந்த பசவதாரகம் கதாபாத்திரம் எனது நினைவுகளில் என்றென்றும் பசுமையாக இருக்கும் என்று கூறியுள்ளார்.

Sharing is caring!