விநாயகர் சதுர்த்தி அன்று அறிவிப்பு… வருமா? வருமா..!

சென்னை:
விஜய் – அட்லீ கூட்டணி குறித்து அடுத்த மாதம் 13ம் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று தெரிய வந்துள்ளது.

விஜய் அடுத்தடுத்து வெற்றி இயக்குனர்களுடன் கூட்டணி அமைத்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்து வருகிறார். முருகதாஸ் பட தகவலும் வந்து ரசிகர்களை கொண்டாட வைத்தது. அவர்களது கூட்டணியில் தயாராகும் சர்கார் படமும் நாளுக்கு நாள் எதிர்பார்ப்பை கூட்டி வருகிறது.

அடுத்து அட்லீயுடன் விஜய் கூட்டணி அமைக்கிறார், இந்த முறை வேறு லெவலில் இருக்கும் என்று இயக்குனர் ஒரு பேட்டியில் கூறினார். அடுத்தபடியாக படம் குறித்து எந்த தகவலும் வராமல் இருந்த நிலையில் ரசிகர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி வர போகுது. வரும் விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷலாக விஜய்-அட்லீ படத்தின் சில தகவல்கள் வெளியாகலாம் எனப்படுகிறது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!