விராட்-அனுஸ்கா கேரளாவுக்கு வித்தியாசமான உதவி

வெள்ளத்தால் பாதிக்கப் பட்ட கேரள வெள்ளத்திற்கு பிரபலங்கள் பலரும் உதவி செய்து வருகிறார்கள். பணம், உணவுப் பொருட்கள், ஆடைகள் என அவரவரின் விருப்பத்திற்கேற்ப உதவி வருகிறார்கள். சினிமா நடிகர்களைப் பொறுத்த வரையில், தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி திரையுலக நடிகர்கள் பலரும் கேரள மக்களுக்கு உதவி செய்து வருகிறார்கள்.

அந்த வகையில் கிரிக்கெட் வீரர் விராத் கோலியும், அவரது மனைவி அனுஷ்கா ஷர்மாவும் செய்த செயல் பலரையும் ஆச்சர்யப் படுத்தியிருக்கிறது. அங்குள்ள மக்களுக்கு உதவி புரிந்ததோடு மட்டுமல்லாமல், கேரள வெள்ளத்தால் பாதிக்கப் பட்டிருக்கும் உதவி கரம் நீட்டியிருக்கிறார்கள் இந்த காதல் தம்பதிகள்.

விலங்குகளுக்குத் தேவையான மருந்து மற்றும் உணவுப் பொருட்களை அவர்கள் கொடுத்து உதவியுள்ளனர். ‘நமக்கு இதெல்லாம் வேண்டுமென கேட்க முடியும். ஆனால் வாயில்லா ஜீவனால் அது முடியாது, எனவே அதன் தேவையை நாம் புரிந்துக் கொள்ள வேண்டும். அதைத்தான் விராத்தும் அனுஷ்காவும் செய்தார்கள்’ என்கிறார்கள் இருவருக்கும் நெருக்கமானவர்கள்.

Sharing is caring!