விருந்து கொடுத்து அசத்திய பாரதிராஜா… கென்னடி கிளப் படக்குழுவுக்கு!

சென்னை:
விருந்து… விருந்து… கொடுத்தார் பாரதிராஜா… படக்குழுவினருக்கு விருந்து கொடுத்தார்.

சுசீந்திரன் இயக்கத்தில் சசிகுமார் – பாரதிராஜா உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகி வரும் கென்னடி கிளப் படக்குழுவுக்கு இயக்குநர் பாரதிராஜா விருந்து அளித்தார்.

நல்லுசாமி பிக்சர்ஸ் சார்பில் தாய் சரவணன் தயாரிப்பில், சுசீந்திரன் இயக்கத்தில் பெண்கள் கபடியை மையமாக வைத்து உருவாகி வரும் படம் `கென்னடி கிளப்’. இப்படத்தின் படப்பிடிப்பு இந்தியா முழுக்க பல மாநிலங்களில் நடைபெற்றது. அதேபோல் தமிழகத்திலும் பல்வேறு ஊர்களில் நடத்தப்பட்டு வந்தது.

இப்படத்தின் இறுதிக்கட்ட காட்சிகளுக்காக விழுப்புரத்தில் பிரம்மாண்டமான தளம் அமைத்து படப்பிடிப்பு நடத்தப்பட்டது. இதில் நிஜ வீராங்கனைகளும் நடித்தனர். பாரதிராஜா முக்கிய வேடத்தில் நடித்து வந்தார். பாரதிராஜாவின் பகுதி முடிவடைந்த நிலையில் அவரது இல்லத்தில் படத்தில் நடித்த நிஜ வீராங்கனைகள், இயக்குநர், உதவி இயக்குநர்கள் மற்றும் படக்குழுவில் பணியாற்றியவர்களுக்கு மதிய விருந்தளித்து உபசரித்தார்.

இந்த படத்தில் பாரதிராஜாவுடன் சசிகுமார், சமுத்திரக்கனி, சூரி, முனீஸ்காந்த், காயத்ரி மற்றும் புதுமுகங்கள் மீனாட்சி, நீது, சவும்யா, ஸ்ம்ர்தி, சவுந்தர்யா உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். டி.இமான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

நன்றி: பத்மா மகன், திருச்சி.

Sharing is caring!