விருமாண்டி இயக்கத்தில் நடிக்கும் மக்கள் செல்வன்.

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தமிழ், தெலுங்கு, மலையாளம் என மிக பரபரப்பாக நடித்து வருகிறார். ஏற்கனவே தமிழில் சீனு ராமசாமி இயக்கத்தில் மாமனிதன் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ள விஜய் சேதுபதி, அதைதொடர்ந்து மணிகண்டன் இயக்கத்தில் “கடைசி விவசாயி”, எஸ்.பி ஜனநாதன் இயக்கத்தில் “லாபம்” உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் மீண்டும் ஒரு தமிழ் படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார் விஜய் சேதுபதி.

இந்த படத்தை க/பெ.ரணசிங்கம் என்கிற டைட்டலுடன் விருமாண்டி என்பவர் இயக்குகிறார். ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகியாக ஒப்பந்தமாகியுள்ள க/பெ. ரணசிங்கம்  திரைப்படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான KJR ஸ்டூடியோஸ் தயாரிக்கின்றது. இதன் படப்பிடிப்பு நேற்று(ஜூன் 10) பூஜையுடன் துவங்கியுள்ளது.

Sharing is caring!