விரைவில் அறிவிப்பு… யாவரும் நலம் இரண்டாம் பாகம் தொடக்கம்

சென்னை:
இரண்டாம் பாகம்… யாவரும் நலம் படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளது என்று தெரிய வந்துள்ளது.

விக்ரம் குமார் இயக்கத்தில் மாதவன் – நீது சந்திரா நடிப்பில் வெளியாகி வரவேற்பை பெற்ற `யாவரும் நலம்’ படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருக்கிறது.

மாதவன் தற்போது இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கை கதை படத்தை இயக்கி நடித்து வருகிறார். நம்பி நாராயணன் பணியில் இருந்தபோது ராக்கெட் ரகசியங்களை விற்றதாக கைது செய்யப்பட்டதையும், பின்னர் அவர் குற்றம் செய்யவில்லை என்று நிரூபிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டதையும் மையமாக வைத்து இந்த படம் தயாராகிறது.

இதில் நம்பி நாராயணன் வேடத்தில் 3 தோற்றங்களில் மாதவன் நடிக்கிறார். தமிழ், தெலுங்கு மலையாளம் ஆகிய மொழிகளில் இந்த படம் தயாராகிறது. இந்நிலையில் விக்ரம் குமார் இயக்கத்தில் மாதவன் நடிப்பில் கடந்த 2009-ல் வெளியான யாவரும் நலம் படத்தின் இரண்டாவது பாகத்தை எடுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

வித்தியாசமான பேய் படமாக வந்து வசூல் குவித்த இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க உருவாகவிருப்பதை மாதவன் உறுதிப்படுத்தி உள்ளார். ராக்கெட்ரி படத்தை முடித்த பிறகு யாவரும் நலம் 2 படத்திற்கான பணிகள் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நன்றி: பத்மா மகன், திருச்சி.

Sharing is caring!