விரைவில் ஒரு முடிவு… பாடகி சின்மயி தகவல்

சென்னை:
விரைவில் ஒரு முடிவு எடுப்பேன் என்று பாடகி சின்மயி தெரிவித்துள்ளார்.

சில நாட்களாக பரபரப்பாக பேசப்படும் விஷயம் சின்மயி- வைரமுத்து பிரச்சனை தான். இதுதான் தற்போது பல இடங்களில் விவாத பொருளாக உள்ளது. இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் பாடகி சின்மயி கூறியதாவது:

நான் இதை விளம்பரத்திற்காக கூறவில்லை. அந்த சம்பவம் நடந்தது உண்மை. பல ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த விஷயத்திற்கு இப்போது ஆதாரம் கேட்டால் என்ன நியாயம். அப்போது எனக்கு துணிச்சல் இல்லை. ஆனால் இப்போது எனக்கு பயமில்லை.

மேலும் வைரமுத்து மீது சட்டரீதியான நடவடிக்கையை எடுப்பது குறித்து எனது வக்கீலிடம் ஆலோசித்து வருகிறேன். விரைவில் ஒரு முடிவெடுப்பேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!