விரைவில் திருமணம்

பாகுபலி படங்களின் புகழ் பிரபாஸ் – அனுஷ்கா ஜோடி காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. இருவருமே மறுத்ததோடு, நாங்கள் நண்பர்கள் மட்டுமே என்றார்கள்.

இந்நிலையில், பிரபாஸின் மாமா கிருஷ்ணம் ராஜூ என்பவர் ஒரு செய்தி வெளியிட்டுள்ளார். அதில், சாஹோ பட வேலைகள் முடிந்ததும் பிரபாசுக்கு திருமணம் நடக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

சாஹோ படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிகட்ட பணிகள் நடக்கின்றன. ஆகஸ்டு 15-ந் தேதி திரைக்கு வர இருக்கிறது. அப்படியென்றால் இந்த ஆண்டு இறுதியில் பிரபாஸின் திருமணம் நடக்கும் என்று தெரிகிறது.

Sharing is caring!