விரைவில் வருது… நடிகர் சிவகார்த்திகேயன் படத்தின் தலைப்பு

சென்னை:
இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வரும் படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் இம்மாதம் வெளியாகிறது.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரின் மனங்களை கவர்ந்தவர் நடிகர் சிவகார்த்திகேயன். நடிகராக மட்டுமின்றி பாடலாசிரியர், தயாரிப்பாளர், பாடகராகவும் திறமை காட்டி வருகிறார். இவர் தயாரிப்பில் கடந்த வருடம் வந்த கனா நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் சிவகார்த்திகேயன் புத்தாண்டு வாழ்த்துக்கள் கூறியதோடு ராஜேஷ் இயக்கத்தில் அவர் நடித்து வரும் படத்தின் பர்ஸ்ட் லுக், டைட்டில் இம்மாதம் வெளியாகவுள்ளதாக கூறியுள்ளார்.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!