வில்லனாக நடிப்பது யார்

ரஜினி நடிப்பில் ஷங்கர் இயக்கிய பிரமாண்ட படம் 2.ஓ. இந்த படத்தில் பாலிவுட் நடிகர் அக்சய்குமார் இன்னொரு ஹீரோ போன்ற ஒரு வேடத்தில் நடித்திருந்தார். இந்நிலையில், தற்போது கமல் நடிக்கும் இந்தியன்-2 படத்தை இயக்கி வருகிறார் ஷங்கர்.

இந்த படத்தில் கமலுடன் காஜல்அகர்வால், நெடு முடிவேணு, துல்கர்சல்மான், சித்தார்த் ஆகியோர் நடிப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. அதோடு இப்படத்தில் வில்லனாக நடிப்பது யார் என்கிற தகவல்கள் வெளியாகவில்லை. பாலிவுட் நடிகர்கள் அஜய்தேவ்கன், ஹிருத்திக் ரோஷன் ஆகியோரது பெயர்கள் அடிபட்டு வந்த நிலையில், தற்போது 2.ஓ வில் நடித்த அக்சய்குமாரை மீண்டும் டைரக்டர் ஷங்கர் அழைத்திருப்பதாக ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது.

ஆனால் இதுகுறித்து அக்சய்குமார் தரப்பில் இருந்து ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது. ஷங்கர் இயக்கத்தில் மீண்டும் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன். ஆனால் ஹிந்தியில் நான்கு படங்களில் கமிட்டாகி விட்டேன். அதனால் போதுமான நேரம் இன்மை காரணமாக குழப்பத்தில் இருந்து வருவதாக தெரிவித்துள்ளார்.

Sharing is caring!